Thursday, 28 July 2011

இது காதலா?...காமமா?....


வணக்கம் என் நண்பர்களே.....நம்ம வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு விசயமும், நமக்கு ஏதாவது ஒரு விதத்துல, அனுபவத்தையும், தைரியத்தையும் தருகிறது....எத்தனையோ பேரை நம்ம கடந்துபோக சிலர் மட்டும் தான் நம்மை நட்பாகவும், காதலாகவும், அன்பால கடத்திச் செல்கிறார்கள்....இதுல நல்லது மட்டுமே கொடுக்கிற நட்பு ஒரு ரகம்....தன் சுயநலத்துக்காக, காதல்கிற பேருல, நம்ம சுத்தியிருக்கிற, நண்பர்கள் உலகத்த சுருக்கிக்கிற காதலர்கள் ஒரு புறம் (வெகு சிலர் )....(வழக்கம் போல காதல் பதிவான்னு நினைக்க வேணாம்.....)...காதலால நட்ப புறம் தள்ளி வைத்த என் தோழியின் தோழி கதையை அவங்கள் வேண்டுதல் பேருல, கொஞ்சம் நிதர்சன உண்மைகளை மறைத்து, நாகரீக முறையில் பதிவிடுகிறேன்...




அவர்கள் தன் காதலை பதிவிட சொன்னதன் நோக்கம் : காதல் பித்து பிடித்து அலையும் பலருக்கு வெறுப்பாக இருக்கலாம் இந்த பதிவு, ஆனாலும் எங்கயோ தன் சுயம் தொலைத்து கொண்டு இருக்கும் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ என் வாழ்க்கை ஒரு படமாக இருக்கும்....அதற்காக வேண்டும் என் காதலை கதையாகவோ...இல்லை கவிதையாகவோ சொல்லிவிடுங்கள் என்று சொன்னார்....




அதோடு, அந்த தோழியின் சுய அறிவில்லா முன்னால் காதலன், என் வலைத்தளம் வருவானாம் ...உங்கள் நண்பர்கள் இதற்கு இடும் கருத்து அவன் மனதிற்கு எட்டவேண்டும், என்று என்னிடம் கூறினார்......




அதோடு என் மனதில் நல் மாற்றம் வேண்டி உங்களிடம் என் கதையை பகிர்கிறேன்னு அவங்க கதைய சொல்லிடாங்க...இதோ உங்களுக்காய்




இளமையின் முதல் சந்தோஷ காலம் எதுன்னு கேட்டா எல்லோரும் கண்ண மூடிடு நம்ம கல்லூரி காலத்தை தான் பதிலாய் சொல்வோம்...அப்படிப்பட்ட கல்லூரி காலம் முடிவடைந்தவுடன் அவரவர் வேலை தேடி பயணப்படுவர்...அனிதா பிறப்பில் வசதியாய் பிறந்து, காலமாற்றத்தால் கடன் பட்ட குடும்பத்தின் சுமையைக் குறைக்க சென்னை நோக்கிப் பயணப்பட்டவள்....இதுவரை கட்டுக் கோப்பாய் வளர்ந்த சூழலில், சென்னை சுதந்திரம் அவளுக்கு புது வித பயத்தை தந்து...இருப்பினும் ஒரு நல்ல அலுவலகத்தில் பணியில் சேர்ந்தாள்..அவள் பெற்றவர்களை விட அதிகம் பாதுக்காப்பை அவள் நட்பு அவளுக்கு தர, அழகான அவள் அலுவலக காலம் நயமாய்ச் செல்ல, தன் தோழியின் நண்பனாய் அறிமுகமானான் அரவிந்த்...




அரவிந்த் பார்த்ததும் பற்றிக்கொள்ளும் காந்தக் கண்களுக்குச் சொந்தக்காரன்....அரவிந்தனின் முதல் பார்வையே, அனிதாவின் மீதான காதல் படையெடுப்பாய் மாறியது..அதை பார்வையில் உணர்ந்த அனிதா, சற்றும் பொருட்படுத்தாமல் நட்பு ரீதியில் நாட்களைக் கடத்தினாள்..நாட்கள் நட்பின் போர்வையில் நகல, அனிதா மீதான் தன் காதலை அரவிந்தன் அவளிடம் சொன்னான்...




இது அவள் எதிர்பார்த்த ஒன்று தான், இருந்தாலும் அவன் காதலை ஏற்காத அனிதா அவன் நட்பை விட்டு விலக நினைத்த நேரம், சிறு சிறு பிரச்சனைகள் மற்றவர்களால் இவளுக்கு முளைக்க, இவள் தான் நண்பர்களிடம் பகிர்வதை குறைத்து, அரவிந்தனிடம் அந்த பிரச்னைக்கு தீர்வு நாடி சென்றாள். அரவிந்தனும் அவளின் பிரச்சனைகளுக்கு முடிவு காண, நாட்கள் இவன் என் நண்பன் என்ற ரீதியில் நகல, அரவிந்தனின் அன்பும், அரவணைப்பும், காதலும் இவளுக்குள் புதுவித கற்பனை உலகத்தை வளர்க்க, இதுவரை தன்னை சுற்றயுள்ள தன் சுற்றத்தை கொஞ்சம் மறந்தே போனாள்...




அனிதா தன் காதலை மறைக்க முடியாமல், அரவிந்தனிடம் காதலை சொல்ல, இனிய பரபரப்புடன் சந்தோஷ வானில், அழகாய் பறந்தனர் இந்த காதலர்கள். ஏக்கங்களும், தவிப்புகளும்,கனவுகளும், காதலும், கற்பனையும் அவர்கள் வாழ்வை காதலால் நிரப்ப, அன்பு காதலர்களாய், அழகோடு பவனி வந்தனர்....




பிறிதொரு நாட்களில் அரவிந்தன் அனிதாவிற்க்காய், அனுப்பிய

சின்ன சின்ன பரிசுகளும், நலம் விசாரிக்கும் குறும்செய்திகளும், அக்கறை அழைப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய, அனிதா கொஞ்சம் தடுமாறியே போனாள்...அனிதா வர தாமதம் ஆனாலும் தவியாய் தவித்து அவள் அலுவலகத்தை படையெடுத்த அரவிந்தன், அவள் விரும்பி அழைத்தும், அவளை சந்திப்பதை தவர்க்கத் தொடங்கினான்...தவறான ஒருவனை காதலித்து விடமோ என்று மனக்கிடங்கில், பயத்தின் தீயைப் பற்ற வைத்தாள் அனிதா..




பிறகு அரவிந்தனின் செயலும், பார்வையும் இவள் பயத்தை உறுதி படுத்த, நிலைகுலைந்து போனாள் அனிதா..அவன் நிராகரிப்பின் காரணம் அறிய, அவனை அலைபேசியில் தொடர்புகொண்டாள்...அதுவரை அனிதா, அரவிந்தனை தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்தாலே, தொலைபேசியில் அழைக்கும் அரவிந்தன், இன்று அவள் பலமுறை அழைத்தும், தொடர்பை ஏற்க்க வில்லை...




அனிதா இதுவரை அனுபவிக்கத வலியை உணர, சுற்றி உள்ள அனைத்தும், இவளுக்கு சூனியமாய் தெரிய,எதிலும் இவள் கவனம் செல்லாமல், தன் காதலே கெதி என்று, அவன் பெயரையும், அவனோடு களித்த அந்த இடங்களுக்கும், சென்று தன்னோடு அவன் என்றும் இருக்கிறான் என்ற எண்ணத்தில், பொழுதை கழித்தாள் அனிதா...வேலையிலும் கவனமின்றி, நட்பின் பார்வையில் , தன் விசயங்களை பகிர்தலின்றி தனக்கென்ற ஒரு உலகத்தை கற்பனையிலே உருவாக்கி, அவனோடு உறவாடி வந்தாள்...




பின் ஒரு நாளில் அரவிந்தனிடம் இருந்து அழைப்பு வர, பறந்து சென்றாள் அனிதா அவனை சந்திக்க, அரவிந்தன் இந்த ஊடலுக்கு ஏதேதோ, காரணம் சொல்லி அவளை சமாதானப் படுத்த, அனிதாவின் உண்மையன்பை உணர்ந்த அரவிந்தன், பின் அவளை விட பன்மடங்கு அனிதாவை நேசித்தான்...வருடங்கள் ஐந்து காதலோடு கழிய, அனிதாவின் குடும்பம் அவளை திருமணத்திற்கு நிர்பந்திக்க, அரவிந்தனிடம் இதை பற்றி பேச முடிவு செய்தாள் அனிதா....




அரவிந்தனும் இதற்க்கு ஒப்புதல் அளிக்க, திருமணம் பற்றி பெற்றோர்களிடம் பேசும் முன்பே, கனவுகளோடு காலம் களித்தனர் காதலர்கள்..இந்த நேரத்தில் அரவிந்தனின் அலுவலகத்தில், புதிய பணியில் வந்து சேர்ந்தாள் ராகினி...ராகினி அல்ட்ரா மார்டன் அழகி...வசதி படைத்தவள்...ஆரம்பத்தில் அரவிந்தனிடம் நட்போடு பழக ஆரம்பித்தவள், நாளைடவில் அரவிந்தனின் துடுக்குப் பேச்சும், அவன் குணமும் இவளை ஈர்க்க, காதல் வலையில் அவன் அனுமதி இன்றி விழுந்தாள் ராகினி...




ஒரு மாலையில் வழக்கம் போல் அனிதாவும், அரவிந்தனும் சந்தித்துக் கொண்ட அந்த அந்தி நேரம் ராகினியைப் பற்றியும், அவள் பணபலத்தைப் பற்றியும் பேசி முடித்தான் அரவிந்தன்,,,அனிதாவிற்கு அவன் பேச்சு சந்தோஷத்தையும், கொஞ்சம் மிரட்சியையும் தந்தது...தன் காதலன் தன் மீது உள்ள நம்பிக்கையால் ஒரு பெண் பற்றி தன்னிடம், பேசுவது அவளுக்கு சந்தோஷம் தந்தாலும், அதற்காய் அவன் பிரயோகப் படுத்திய வார்த்தைகள் அவளுக்கு மிரட்ச்சியை தந்தது...எதற்கும் ராகினியிடம் தள்ளியே இருங்கள் என்று அன்பு கட்டளை இட்டுவிட்டு, அன்றைய சந்திப்பை காதலோடு முடித்தனர்.




ராகினி கொஞ்சம் கொஞ்சமாய் அரவிந்தனை, ஆளநினைத்தாள்...

அரவிந்தனும், ஒரு கட்டத்தில் வளைந்து கொடுத்தான்...இருவரும், நட்பின் வாசலில் நுழையும்போதே, அரவிந்தன் இதுவரை எந்த பெண்ணையும் நேசிக்கவில்லை என்ற, காதல் அனுமதி சான்றிதழுக்கு கையொப்பம் இட்டுச் செல்ல, ராகினியும் இவன் தனக்கானவன் என்றே தன் மனதில் எண்ணிக்கொள்ள, ராகினி தன் காதலை அரவிந்தனிடம் சொல்ல, தன் குடும்ப சூழல் காரணமாய், பணக்கார பெண்ணை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அரவிந்தனுக்கு, ராகினியின் காதல் வரமாய் வந்தது என்று நினைத்து தன் வாழ்வை, பணம் கொண்டு வளப்படுத்தினான்..




.அனிதாவை சந்திக்கும் ஒரு வாரத்திற்குள், இவன் வாழ்வில் வந்திட்ட இந்த மாற்றத்தை உணராத அனிதா, வழக்கம் போல் காதலோடு அவனுக்காய் காத்திருந்தாள்..அரவிந்தனும், அன்றைய சந்திப்பில் நடந்தவைகளை, மறைத்து ராகினி அவனை விரும்புவதாகவும், தான் அதற்க்கு சம்மதிக்க வில்லை என்றும் சொல்லி விட்டு சென்றான்... ஆனாலும் இவன் கண்கள் பேசும் வாதையில்ர்த்தைக்கு பொருள் அறிந்த அனிதா, கண்ணீர் கொண்டு தன் காதலை மீண்டும் அவனிடம் சொல்ல, இதுவரை பணபோ இருந்த அரவிந்தன், ராகினியிடம் தான் ஆறு வருடம் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், இன்று நாங்கள் நண்பர்கள் என்றும் சொல்ல, ராகினி அனிதாவை சந்திக்க வேண்டும் என்று அரவிந்தனிடம் கட்டளை விதிக்க, அனிதா அறியாமல், அவர்கள் சந்திக்கும் அந்த மாலையில் ராகினி அரவிந்தனோடு வந்தாள்..




இதை சற்றும் எதிர்பார்க்காத அனிதா , ராகினி வருகையின் காரணம் அறிந்து செய்வதறியாமல், திணற, இறுதியில் ராகினியே தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், உங்கள் பழைய காதல் தனக்கு தெரியும், உங்களின் நெருக்கமும் தெரியும் அதைப் பற்றி தான் கவலை கொள்ளவதாக இல்லை என்று சொல்லிவிட்டு, அவ் விடத்தை விட்டு நீங்கிச் சென்றாள்.... இது கனவாய் இருக்குமோ என்று தன்னை தேற்ற நினைத்து கொண்டு இருக்கையில், அரவிந்தன் ராகினி வசம் சென்றதை அவன் வார்த்தைகள் அவளுக்கு காட்டியது...




தனக்கான உலகம் சூனியமாய்ப் போனதை உணர்ந்த அனிதா, செய்வதறியாமல் விழிநீர் வழிய, தான் ஒருவனால் ஏமாற்றப் பட்டோம் என்பதை உணர்ந்து, தற்கொலைக்கு முயல, உணர்வுகள் இணைத்த அவள் நட்பு, என்றும் இல்லாமல் அவளை தொடர்பு கொள்ள

தன் நிலையைச் சொல்லி அழுத அனிதாவை, ஆறுதல் சொல்லி, அவள் உண்ட விஷத்தை மருத்துவர் துணையுடன் வெளியேற்றினர்....




இவள் விஷம் அறிந்திய காரணம் அறிந்த நண்பர்கள், அரவிந்தன் அலுவலகத்தில் படையெடுக்க, அவனை தாக்கினர்...ராகினி நிலைமை உணர்ந்து அவர்களை விலக்கி விட, அரவிந்தன் பாதுகாக்கப்பட்டான்... தான் ராகினி முன் தண்டிக்க பட காரணமாய் இருந்த அனிதாவை எப்படியும் கொன்று விட வேண்டும் என்ற உறுதியோடு இருந்த அவனை, அந்த மருத்துவமனைக் காட்சி கொஞ்சம் மாற்றிப் போட்டது....




இருப்பினும் கொச்சை வர்த்தைகாளால் வசைபாடி விட்டு, தனக்கும், ராகினிக்கும் இன்னும் இரண்டு மாதங்களில் பெற்றோர்களால் நிச்சயிக்க பட்ட அந்த திருமண அழைப்பிதழை அனிதாவிற்கு தந்து விட்டு சென்றான்,




தோழி அனிதா இன்று நட்பின் துணையோடு நலமாக சென்னையில், தன் பணிகளோடும், அவன் நினைவு தந்த வலிகளோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்...அரவிந்தன் தன் புது காதல் மனைவியோடு, உறுத்தாமல் உலா வருக்கிறார்....




நண்பர்களே...இது என் தோழியின் தோழிக்கு நடந்த கதை....எது காதல், எது காமம்...எங்கே நமது தேடல்?....என் தோழியின் காதலன் போல் தெளிவான அறிவில்லாமல், சஞ்சலப் படும் மனதிற்கு, இன்னொருவர் பலியாகலாமா?.....நமக்கு தெரிந்ததெல்லாம், காதலை பெண்கள் புறம் தள்ளுவார்கள் என்று, இங்கு என் தோழியின் சுயநல காதலன்.அந்த தோழியின் உண்மைக் காதலை புறம் தள்ளினார்...




இது ரொம்ப தேவையான பதிவான்னு நீங்க கேக்கலாம்...ஆனா இன்னைக்கு தற்கொலைகள் அதிகமா இருக்க இரண்டு காரணம் ஒன்னு:கடன்

இன்னொன்னு : காதல்....

கடன் தன் சுற்றியுள்ள சுழலின் நிலைமையை பெருக்க இல்ல சமாளிக்க வாங்குற விஷயம்....

ஆனால் காதல்....இலகுவாய் ஒருவர் உள்ளம் நுழைத்து, உயிரை இழக்கும் அளவிற்கு துணிய வைக்கும் மாய கொள்ளைக்காரன் அல்லவா இந்த காதல்....




இப்போ என் தோழியின் வீட்டில் திருமண பேச்சுக்கள் நடக்க, தோழி அவற்றை புறம் தள்ளி, சுயமாய் வாழ விரும்புவதாய், அவர் பெற்றோரிடம் சொல்லி வருகிறார்...என் இனிய நண்பர்களே... என் தோழிக்கு நல்ல நடப்பாய் தாங்கள் தரும் பதில் என்ன என்று அவர் அறிய ஆவலாய் உள்ளார்.நீங்கள் இந்த பதிவுக்கு தரும் வரவேற்ப்பை பொறுத்தே இதை போன்ற உண்மை சம்பவங்களை பகிர இருக்கிறேன்..




வழக்கம் போல் இந்த பதிவை உங்கள் பார்வை பயணத்தில் பயணப் படவைக்கிறேன்....(இப் பதிவை நகைச்சுவையாய் எடுக்காமல் ஒரு பெண்ணின் வாழ்க்கை இப் பதிவில் உள்ளதென்ற எண்ணத்தில் உங்கள் கருத்துக்களை இடவும்...அதோடு நாகரீக மான பின்னூட்டங்கள் மட்டுமே இங்கே வெளியிடப்படும், நகைச்சுவையாய் அல்லது வேறுவிதமாய் நீங்கள் அளிக்கும் பின்னூட்டம் புறம் தள்ளப்படும் என்பதையும் தெரிவிக்கிறேன்.புரியுறவங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.... )

மொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளையும், SMS களையும் தடுக்க ஒரு வசதி




நாம்பயன்படுத்தும்செல்போனில்நெறையவசதிகளைபயன்படுத்திவருவோம். அதில்முக்கியமானவசதி " Block list Calls " மற்றும் " Block list SMS" என்றவசதியாகும். இந்தவசதியின்மூலம்நமக்குவரும்தேவையில்லாதகால்களையும் , எஸ்எம்எஸ்களையும்தடுத்துவிடமுடியும். இந்தஇரண்டுவசதிகளையும்தனிதனிஅப்ளிகேசன்மூலமாகதான்பயன்படுத்தமுடியும்.
ஆனால்இப்போதுபுதிதாக" Killer Mobile சாப்ட்வேர் " மூலமாகஇந்தஇரண்டையும்ஒரேஅப்ளிகேசனில்நாம்பயன்படுத்திகொள்ளலாம்.இந்தபுதியஅப்ளிகேசனின்பெயர்" Blackballer " என்பதாகும்.


இந்த அப்ளிகேசனின் சிறப்புகள் :
•நமக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.
•அடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரை, கால் வராமல் தடுக்கலாம்.


•அடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரை, எஸ் எம் எஸ் வராமல் தடுக்கலாம்.
•குருப் உருவாக்கி,தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.
•ஸ்பாம் நம்பர்ஸ் அப்டேட்ஸ் செய்து கொள்ளலாம்.
•பாஸ் வோர்ட் வசதி செய்து கொள்ளலாம்.
•அணைத்து வகை மொபைல் களுக்கும் பயன்படக் கூடியது .
•( Nokia,Windows Mobile ,Android and Blackberry )

இதில்குறிப்பிடத்தக்கவகையில்உள்ளஒருவசதிஸ்பாம்நம்பர்ஸ்அப்டேட்ஸ்வசதியாகும். நாம்எப்போதுவேண்டுமானாலும்நமதுநாட்டின்ஸ்பாம்நம்பர்களைஅப்டேட்ஸ்செய்துநமதுமொபைலுக்குவரும் தேவையில்லாதகால்களையும் , எஸ்எம்எஸ்களையும்தடுக்கலாம்.







இந்தஅப்ளிகேசன் " Lite version " மற்றும் " Paid version " என்றஇரண்டுவடிவங்களில்கிடைக்கிறது

ஏது “ புது ” வருடம்

“ புது வருடம் ”
பிறந்து விட்டது
சொன்னது...
நாட்காட்டி !
எட்டி வந்து வெளியே பார்த்தேன்
மாற்றம் ஏதும் நிகழ்ந்ததாய்
“ இயற்கை ” ஒன்றும் சொல்ல வில்லை

அதே வானம் கரிய மேகங்கள் சூழ்ந்து
நீல வண்ண கடல் மௌனமே பதிலாக
குளிர்ந்த தென்றலாய் காற்று கூட மாற்றமின்றி

வாடிய வதனத்துடன்
நாட்குறிப்பில் எழுதுகிறேன்
“ இயற்கையும் ” மாற வில்லை - இங்கே
எந்த “ மனிதனும் ” மாற வில்லை

அடக்கு முறையால் அடக்கப்பட்ட
“ சிறு பான்மை ” இனங்கள் எல்லாம்
ஏது “ புதுவருடம் ” என்று
எதிர் பார்த்து நிற்க

என் தேசத்து சொந்தங்களே

நீங்கள் எதிர் பார்க்கும்
சமாதான பேய்கள்
எட்டி நின்று உதைக்கவே போகின்றது
உங்களை

எழுந்து நீங்கள் அழும் முன்னே
ஒழிந்து நின்று “ போர்முரசு ” செய்யும்
அதனால்
தயாராகவே இருங்கள்

மாற்றங்கள் இன்றி தான்
விடியலும் விடிந்தது - அந்த
சூரியனும் உதித்தது
நாமும் அப்படியே
இருப்போம்

“ தமிழீழம் ” எனும் தேசம் தோன்றி
எம் வீரர் கனவு நனவாகும் வேளை
“ புதுவருடம் ” பிறந்தமதாய்
கல்வெட்டில் நாம் பதிப்போம்
அது வரை எமக்கு
ஏது “ புது ” வருடம்.

அம்மா என்றும் உந்தன்

அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாட என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் களங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

என்னக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,

அத்தி பூக்கும் தருணமாய்..!
என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!
என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

தொலைபேசியில்...
உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..! கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்

என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்...!!!

காதல் கதை

ரம்யா, சுத்தமான தயிர் சாதம் என்பது முகத்திலேயே தெரியும். அக்ரஹாரத்து பொண்ணு. படிப்பது பன்னிரெண்டாம் வகுப்பு. வளர்த்தியான, உயரத்துக்கு ஏற்ற உடம்பு கொண்ட அழகான, அளவான தேகம். படிய வாரப்பட்டு பாதியில் ரிப்பன் கட்டிய இரட்டை ஜடை. அதன் ஒரு பக்கத்தில் தொங்கும் அடர் மல்லிகை. அரக்கு கலர் பாவடைக்கு பொருந்தும் பிங்க் நிற தாவாணி தான் பள்ளி சீருடை. அவள் "போயிட்டு வர்றேன்மா" என்று சொல்லும் போதே தெரு பசங்களெல்லாம் வெளியே வந்து எதேர்ச்சையாக நிற்பது போன்றோ அல்லது வீட்டினுல்லிருந்தோ அவளைப் பார்ப்பதோ அவளுக்குத் தெரியாது, அவள் தோழி பானு சொல்லும் வரை.


பானு ஹரியின் தங்கை. ஹரி தான் அவளை ரம்யாவிடம் அனுப்பினான், தன்னை ரம்யாவிடம் அறிமுகப்படுத்தும் படி. அவன் வழிந்த அசடில் "ஹாய் அண்ணா" என தன்னை அறிமுகம் செய்து கொண்டு கிளம்பினாள். பானு ஹரியைப் பரிதாபமாகப் பார்த்தாள். ஹரி அவளை முறைத்து "அண்ணா" என்பது "ஏன்னா" என மாற எவ்வளவு நாளாகப் போகுது என தனக்குத் தானே சமாளித்து சென்றான். பானுவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லைஎனினும் அண்ணின் குட்டுக்கு பயந்து வாயை மூடிக் கொண்டு உள்ளே சென்றாள்.



நாட்கள் நகர்ந்தன. தெரு முழுவதும் அல்லோலகல்லோலப்பட்டது. காரணம் எதிர் வரும் பொதுத் தேர்வுகள். தெருவிலிருந்து மொத்தம் பதினான்கு பேர் ஒரே நேரத்தில் தேர்வை எதிர்கொண்டனர். போட்டி அதிகமான நேரத்தில் பானு ரம்யாவிடம் அதை சொல்லியிருக்க வேண்டாம் தான். ஆனால் பெண்களுக்கு எதை எப்போது பேசுவதென்ற புத்தி எப்போது இருந்திருக்கிறது. ரம்யாவை தன வீட்டிற்கு அழைத்தாள் பானு.



"சொல்லு பானு, என்ன திடீர்னு அவசரமா வர சொன்ன? ட்யூஷனுக்கு லேட் ஆறதுடி"



"இல்லடி உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல."



"என்னாச்சு பானு? எதுவும் பாடத்துல உனக்கு போயிடுத்தா... உங்க அம்மா கிட்ட பேசணுமா..."



"ஐயோ, அதெல்லாம் இல்ல. எங்க அண்ணாக்கும் எதிராத்து கார்த்திக்கும் நேத்திக்கு சண்டைடி. அண்ணா மேல கை வெச்சிட்டான்.அவன் இன்னிக்கு காலேஜ் போல."



"ஐயோ என்னாச்சுடி அண்ணாக்கு"



"ஒன்னும் இல்லை. அவன் சரி ஆகிடுவான். ஆனா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அதான் வர சொன்னேன். ஆத்துல யாரும் இல்ல. அதான் இப்போவே சொல்லிடலாம்னு. நீ எதுவும் குறுக்க பேசாத. நான் சொல்றத மட்டும் கேளு. எதிராத்து கார்த்தி உன்னை லவ் பண்றானாம். என் அண்ணா தற்செயலா உன்னைப் பத்தி ஏதோ சொன்னதுக்கு 'அவளைப் பத்தி நீ ஏண்டா பேசற' னு அவனை அடிச்சுட்டான். அவன் உன்னையும் ஏதாவது வம்பிளுக்கலாம். அதான் உன்கிட்ட சொல்லி வைக்கலாம்னு கூப்பிட்டேண்டி ரம்யா. பீ கேர்புல்."



ரம்யாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வந்த அழுகையை அடக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.



'என்ன செய்வேன் இப்போது. ஐயோ, அவன் என் கையப் பிடித்து இழுத்து விட்டால்? ஒரு வேளை என்னை பாலோ செய்வானோ. ஸ்கூலில் டீச்சருக்கு தெரிந்தால் திட்டுவாளே'. அவ்வயதிற்கே உரிய அத்தனை இம்மச்சூரிட்டியும் சேர்ந்து அவளை என்னென்னவோ சிந்திக்க வைத்தன. அடுத்த நாள் படித்த கெமிஸ்ட்ரி பாடத்திலிருந்த எந்த சமன்பாடுகளும் மண்டையில் ஏறவில்லை. அழுகையாய் வந்தது. அன்று மாலையே பானுவின் வீட்டிற்குப் போனாள்.



"பானு, நான் கார்த்தி கிட்ட பேசணும். நீ உங்க அண்ணாகிட்ட சொல்லி அவன் கிட்ட சொல்ல சொல்லு. நான் நாளைக்கு நம்ம பெருமாள் கோவில்ல நடை சாத்தினதுக்கப்புறம் மூணு மணிக்கு அவனை பாக்கறேன்" சொல்லி விட்டு அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாவிட்டாலும் அவள் சொன்னதை அப்படியே அண்ணன் மூலம் கார்த்தியிடம் சேர்த்தாள் பானு.



அடுத்த நாள். மாலை மூன்று மணி "ரம்யா, நீங்க என்னை வர சொன்னேளாமே."



"வாங்கோ கார்த்தி. நான் உங்க கிட்ட இதுக்கு முன்னாடி பேசினதே இல்லை. ஏன் நீங்க எனக்காக ஹரி அண்ணாவை அடிச்சேள்..."



"அது வந்து... வந்து...." "நீங்க ஒன்னும் சொல்ல வேணாம். எல்லாம் பானு என்கிட்டே சொன்னா. இங்கே பாருங்கோ நான் இப்போ +2. அடுத்த வருஷம் இன்ஜினியரிங் போகணும். தேவையில்லாம என்னென்னவோ ஒளரிண்டு இருக்காதேள். அப்புறம் நான் மாமி கிட்ட சொல்லிடுவேன்"



"ஐயோ வேணாம். சாரி. இனி நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா, நீ என்கிட்டே இவ்ளோ கோவிச்சுக்காதையேன். Let us be friends at least. "



அவனின் செல்லக் கொஞ்சலை இவளால் மறுக்க முடியவில்லை.



"OK, But only friends. Bye for now. ஆத்துக்குப் போனும். அம்மா தேடுவா."



தூரத்திலிருந்து பார்த்தவளை இனி தோழியாகப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவனுக்கு. கார்த்தியைப் பற்றி சொல்லவில்லையே. நல்ல உயரம், மாநிறம், உயரத்திற்கு கொஞ்சம் குறைவாய் உடம்பு, யாரையும் எளிதில் வசீகரிக்கும் கண்கள், இன்ஜினியரிங் மூன்றாம் வருடம்.



தேர்வுகள் வந்தன, அதைத் தொடர்ந்து முடிவுகளும். 94% மதிப்பெண்களுடன் மதுரையிலுள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தாள். அதே நேரத்தில் அவர்கள் நட்பும் நன்றாகவே நெருக்கமடைந்திருந்தது. மதுரைக்கு அவள் போக ஒரு வாரமே இருந்த நிலையில் ரம்யா கார்த்தியை சந்தித்தாள்.



"கார்த்தி, உங்க கிட்ட ஒன்னு சொல்லணும். ஆனா, எப்படி சொல்லனு தெரியல. ஆனா, சீக்கிரமே சொல்லிடறேன்"



"என்ன ரமி, எதுவும் பிரச்சனையா... ஆத்துல அம்மா கூட எதுவும் சண்டையா..."



"அதெல்லாம் ஒண்ணுமில்ல கார்த்தி. நான் உனக்கு அப்புறம் போன் பண்றேன்."



"ஓகே ரமி" என்று அவளை அனுப்பி விட்டு பாக்கெட்டிலிருந்த வில்சை எடுத்துப் பற்ற வைத்தான். சாயங்காலம் ஆறு மணிக்கு அம்மா கோவில் போனதும் அவனுக்கு போன் செய்தாள்.



"கார்த்தி உன்கிட்ட ஒன்னு சொல்லணும்"



"சொல்லு"



"என்னை எப்போ கல்யாணம் பண்ணிக்குற?"



"என்ன சொன்ன...."



"அம்மா வந்துட்டா. நான் அப்புறம் பேசுறேன்" போனை வைத்து விட்டாள்.



அவனுக்கு கை கால் ஓடவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மறுபடியும் அவள் வீட்டுக்கு போன் செய்தான். "ஹலோ" அவள் குரல் தான் என ஊர்ஜிதப்படுத்தி விட்டு



"ஒரே ஒரு தம் அடிச்சுக்கட்டுமா.... ரொம்ப நர்வசா இருக்கு" "ம்ம்" போனை வைத்து விட்டாள்.



"யார் ரம்யா போன்ல?" அம்மா உள்ளேயிருந்து.



"தெரிலமா. ராங் நம்பர்." இது போல் அடிக்கடி ராங் கால்கள் வந்த போதிலும் மகள் மேலிருந்த நம்பிக்கையின் காரணமாக அவள் அம்மா எதுவும் கண்டு கொள்ளவில்லை. இதற்கு நடுவில் அவர்கள் பெருமாள் கோவில் சந்திப்பு, அவ்வப்போது அடுத்த ஊரில் ஓரிரண்டு படங்கள், தலையில் முக்காடு போட்ட இரு சக்கர வண்டிப் பயணம் என அவ்விருவரின் காதல் நான்கு வருடங்கள் அவள் இன்ஜினியரிங் முடிக்கும் வரை நன்றாகப் போனது. மதுரையில் அவர்கள் சுற்றாத இடம் இல்லை. இதற்கு நடுவில் வீட்டிற்கு தெரிந்தும் இவள் சமாளித்திருந்தாள். ஒரு முறை அவள் விடுதியிலிருந்து அவனுக்கு எழுதிய கடிதம் அவன் அம்மாவின் கையில் கிடைக்க வீடே ரெண்டாகிப் போனது. அவனும் எப்படியோ சமாளித்திருந்தான்.



இப்போது இருவரும் வேலைக்குப் போயாகி விட்டது. அவன் புனேயிலும், அவள் பெங்களூரிலும் நல்ல சம்பளத்தில் பொறுப்பான வேலை. வீட்டில் சொல்லி விடலாம் என அவள் வீட்டுக்குப் போன நாளொன்றில் அவளைப் பெண் பார்க்க வந்திருந்தனர். அவளுக்கு என்ன சொல்வது, எப்படி சமாளிப்பதேன்றே தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக பெண் பார்க்க வந்திருந்தவர் பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும் என அழைக்க, அவரை "அண்ணா" என்றழைத்து தன் விருப்பத்தை இலைமறை காயாக சொல்லி முடித்து விட்டாள்.



அடுத்த சம்பந்தம் வருவதற்குள் இரு வீட்டிலும் காதலை சொல்லி, வழக்கம் போல் முதலில் பெற்றோர் எதிர்க்க, பின் சம்மதித்து நன்றாக திருமணம் முடிந்தது. இப்போது அவர்களிருவரும் பெங்களூரில் 'சவிதா' எனும் குழந்தைக்கு நல்ல பெற்றோராகவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதில் ஒருவரையொருவர் மிஞ்சும் வகையிலும் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதால் பெற்றோருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்போதும் அம்மா வீடும் மாமியார் வீடும் ஒரே தெருவில் இருந்தாலும் மாமியாருக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் ரம்யா, மாமியார் மெச்சும் மருமகளாகவே உள்ளாள். அவளைப் பார்த்து பார்த்து பெருமைப்பட்டுப் போவான் கார்த்தி. அவர்கள் காதல் ஜெயித்ததில் அவர்களைப் போலவே எங்களுக்கும் மகிழ்ச்சி.

காதல் நட்பு...

காதல் நட்பு...



அன்புக்கு மறுபெயர்
காதல் என்றால்
என் அகராதியில்
காதலின் ஒத்த சொல்
நட்பு
அன்பில்லா நட்பு
உன்னது என்றால்
உயிரற்ற உடலை
நீ ஏன் சுமக்கிறாய்..??

உடல் இ்ச்சைக்கு மறு பெயர்
காதல் என்றால்
தீயிட்டு கொழுத்து அந்த
காதலை
வாருங்கள் ஒன்றாக சேர்ந்து
இடித்து போடுவோம்
அந்த காதலின் சின்னங்களை

ஆணுக்கு ஆணும்
பெண்ணிற்கு பெண்ணும்
காட்டும் அன்புக்கு பெயரே
நட்பு என்றால்
எந்த வரையறையுள்
இணைப்பாய் நீ
ஒரு பால் உறவை

ஆணுக்கும் பெண்ணுக்கும்
பெண்ணுக்கு ஆணுமாய்
உள் இழுக்கும் உள் ஈர்ப்பை
நட்பும் காதலுமாய்
நீ பிரிப்பதென்றால்
வரையறைக்குள் சிக்காது
என் காதல்

நான் ஆணையும் காதலித்தேன்
ஒரு பெண்னையும் காதலித்தேன்
என் தாயையும் காதலித்தேன்
என் தேசத்தையும் காதலித்தேன்
இன்று உன்னையும் காதலிக்கிறேன்
உன் தமிழையும் காதலிக்கிறேன்
என்னையும் காதலிப்பதால் தான்
இன்றும் நானாக வாழ்கின்றேன்
இதில்
எதில் கோர்ப்பாய் நட்பை
எதை பிரிப்பாய் காதலாய்

நட்பும் காதலும்
இரு விழிகள் இங்கே
ஒரு விழி போதும் என்றால்
உன் வழியில் தெளிவில்லை

இருவிழியும் வேண்டும் என்றால்
என் கைகோர்த்து நட என்னோடு
இருவிழியை கொண்டு
ஒரு வழி நடப்போம்
அழகாக

Hand Drawings

Hand Drawings




Chalk Drawings

Chalk Drawings




Drawings